மணிலா, பிலிப்பைன்ஸ் (7 ஜூன் 2023) — ஆசிய அபிவிருத்தி வங்கி (ஆ.அ.வ.) சலுகை நிதியுதவி அணுகலுக்கான இலங்கையின் தகமையை அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் சலுகைக் கடன் உதவிகள், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வழங்குவதற்கும், இலங்கையின் அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்துகின்றது.
ஆ.ஆ.வ. இன் அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான சலுகைக் கடன் வளங்களுக்கான தகுதி தனிநபர் மொத்தத் தேசிய வருமானம் மற்றும் கடன்பெறு தகமையின் அடிப்படையில் அமைந்துள்ளது. கடினமான மற்றும் முன்னொருபோதுமில்லாத பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மற்றும் கடின உழைப்பினால் வென்றெடுத்த வளர்ச்சி ஆதாரங்களை மாற்றியமைத்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில், ஆ.ஆ.வ. இன் இந்தத் தீர்மானம் பரிசீலிக்கப்பட்டது.
"இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கடுமையான குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ள இந்த ஆழமான நெருக்கடிக்கு நாடு பதிலளிப்பதால், அவர்களுக்கான ஆதரவினை மேலும் மேம்படுத்துவதற்கு ஆ.அ.வ. உறுதி பூண்டுள்ளது" என்று ஆ.அ.வ. இன் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்தார். "சலுகைக் கடன் உதவிகள் கிடைப்பது பொருளாதார மீட்சி மற்றும் நிலைபேறான, அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கு அடித்தளம் அமைக்க இலங்கைக்கு உதவும்."
இலங்கை இப்போது சலுகை மற்றும் சந்தை அடிப்படையிலான நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, கொள்கை ஆலோசனை மற்றும் அறிவுசார் தீர்வுகள் உள்ளடங்கலாக ஆ.அ.வ. இன் உதவிக்கு தகுதி பெற்றுள்ளது. சலுகை நிதியுதவிக்கான அணுகல் மிகவும் சாதகமான கடன் தவணைகள் மூலம் கடன் தீர்க்கும் அழுத்தங்களையும் எளிதாக்கும்.
ஆ.அ.வ. தீவிர வறுமை ஒழிப்பதற்கான அதன் முயற்சிகளைத் தக்கவைத்துக் கொண்டு, வளமானதொரு அனைத்தையும் உள்ளடக்கிய, மீழ்தன்மை மற்றும் நிலையான ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய சூழலை அடைவதில் உறுதியாக உள்ளது. ஆ.அ.வ. 1966 இல் நிறுவப்பட்டு, அது 49 பிராந்தியங்களைச் சேர்ந்த 68 உறுப்பினர்களுக்குச் சொந்தமானதொரு நிறுவனமாகும்.